தக்காளி தால்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மசூர் பருப்பு - 1/2 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/4 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 1/2 கப்

எலுமிச்சை பழம் - 1

மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 4

தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - சிறிதளவு

செய்முறை:

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின் தக்காளியை போட்டு வதக்கவும்.

பின் மசூர் பருப்பு, போதிய தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள்தூள், சிறிதளவு சாம்பார்பொடி, சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

மூடியைத் திறந்ததும் உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் தாளித்து பருப்பில் சேர்க்கவும்.

பின் சிறிது நேரம் கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்.