தக்காளி சொதி
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயைத் துருவி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நன்கு பழுத்த தக்காளியாக எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை அலசி, குக்கரில் போட்டு வேகவைக்கவும். ஒன்று அல்லது இரண்டு விசில் வரும் வரை வேக வைத்தால் போதுமானது.
வேக வைத்து எடுத்த தக்காளியை மேல் தோல் நீக்கவும். பின்னர் அவற்றை கைகளால் நன்றாக பிசைந்து விழுதாக்கிக் கொள்ளவும்.
தக்காளி கரைசலில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, மஞ்சள், உப்பு மற்றும் கீறிய மிளகாய் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகை போட்டு வெடிக்கவிட்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் கரைத்து வைத்திருக்கும் தக்காளி தேங்காய் கலவையில் சேர்க்கவும். இப்போது அந்த கலவையை பாத்திரத்துடன் அடுப்பில் வைத்து லேசாக கொதிக்கவிடவும். அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம்.
சற்றே கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதை இடியாப்பத்துடன் பரிமாறவும்.