தக்காளி குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

வெங்காயம் - 1

பூண்டு - 2 பல்

தேங்காய் - 1/2 மூடி

பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5

பட்டை - சிறிய துண்டு

லவங்கம் - 2

சோம்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பிறகு பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து வாசம் போக வறுத்து எடுக்கவும்.

ஆறியதும் பூண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதங்கியதும் அரைத்த தக்காளி, மசாலா, உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் கொத்தமல்லி போட்டு பரிமாறவும்

குறிப்புகள்:

இது இட்லி மற்றும் தோசைக்கு ஏற்றது.