தக்காளி குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
பெரிய பெங்களூர் தக்காளி - 5
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
சக்தி கறி மசாலாதூள் - 4 தேக்கரண்டி
மல்லித்தழை, புதினா - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - 2 துண்டு
கசகசா - 3 தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கல்பாசி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
தக்காளியை சுடுத்தண்ணீரில் போட்டு தோல் உரித்து சிறு துண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் (கசகசாவை சுடுத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைக்கவும். (அப்பொழுது தான் மிக்ஸியில் நைசாக அரைக்க முடியும்.)
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள், மிளகாய் தூள், கறி மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
கடைசியாக மல்லித்தழை, புதினா சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.