சுரைக்காய் பால் கறி
தேவையான பொருட்கள்:
சிறிய சுரைக்காய் - 1
பால் - 200 மில்லி
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1/2 அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை, கடுகு தாளித்து, நறுக்கிய சுரைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பாலை ஊற்றி மூடி வைத்து, சுரைக்காயை வேக வைக்கவும்.
சுரைக்காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
மசாலா வெந்து கெட்டியாக குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.