சுண்டைக்காய் பிட்லை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் – 100 கிராம்

துவரம் பருப்பு – 100 கிராம்

தக்காளி – 1

புளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு

மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி – 1/2 தேக்கரண்டி

வெல்லம் – சிறிய துண்டு

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

வரமிளகாய் – ஆறு

மல்லி விதை – 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி

மிளகு – 5

தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

புளியை இருநூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். பருப்பில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி விதை, வரமிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவைகளைப் போட்டு சிவக்க வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆற வைத்து விழுதாக அரைத்து ஐம்பது மில்லி தண்ணீரில் கலக்கி வைக்கவும்.

சுண்டைக்காயை காம்பு நீக்கி இரண்டிரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். (இல்லையென்றால் கறுத்து விடும்)

தக்காளியை நான்காகவும், மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள் போட்டு பொரிந்ததும் சுண்டைக்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து மூன்று நிமிடம் நன்கு வதக்கவும்.

பின் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கி புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு பருப்பையும், அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றி பத்து நிமிடம் இறுக மூடி வைத்து பிறகு எடுத்து பயன் படுத்தவும்.

குறிப்புகள்: