சுண்டைக்காய் குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 8

பூண்டு - 4 பல்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

சுண்டைக்காய் வற்றல் - 10

தேங்காய் - 2 சில்லு

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை சிறிது நேரம் சுடுநீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளி, உப்பு தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து எடுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டு பல் பூண்டினை போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

அதன் பிறகு அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியினைச் சேர்த்து மேலும் நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து, கெட்டியாகி எண்ணெய் தெளிந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: