சுண்டு வற்றல் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 100 கிராம்

சுண்டு (சுண்டைக்காய்) வற்றல் - 15

மாங்கொட்டை வற்றல் - 1

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவேண்டும்.

மாங்கொட்டையை குறைந்தது 3 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த மாங்கொட்டையிலிருந்து சதை தனியாகவும் கொட்டையில் இருக்கும் வெள்ளை நிற பருப்பு தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும்.

வெங்காயத்தை நான்காகவும், தக்காளி பொடியாகவும் நறுக்கி வைத்து கொள்ளவும்.

சிறிது அளவு எண்ணெயில் சுண்டு வற்றலையும், அந்த வெள்ளை பருப்பையும் வறுத்து எடுக்க வேண்டும்.

ஆறிய பின்பு இதனை பொடியாக இடித்து வைக்க வேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம் கறிவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும்.

பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு குழையும்வரை வதக்கவும்.

இதனுடன் புளி தண்ணீர் சேர்க்கவும். பின்பு மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் சதை, ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொண்டைக்கடலை வெந்தவுடன் அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: