சின்ன வெங்காய வத்தக்குழம்பு
தேவையான பொருட்கள்:
உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 2
புளி விழுது - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உலர்ந்த மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து அப்படியே முழுதாகப் பயன்படுத்தவும்.
தக்காளியை மேல் தோலுரித்து, நறுக்கி அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தக்காளி விழுது, புளி விழுது, உப்பு ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
அதன் பின்னர் தோலுரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து, சற்று நிறம் மாறி வரும் வரை வதக்கவும்.
அத்துடன் சாம்பார் பொடியையும் சேர்த்து சிறிது நொடிகள் வதக்கவும். உடனேயே தக்காளி, புளி கலவையைச் சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து வேகவிடவும்.
குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியதும் திறந்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன், கூட்டு போன்றவற்றின் துணையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.
சுட்ட அப்பளம் மிகவும் பொருத்தமான துணை.