சின்னவெங்காய மோர் குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கின சின்ன வெங்காயம் - 1 கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன் - 2 கப்
அரைப்பதற்கு:
தேங்காய்ப்பூ - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி விடாமல், ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து கிளறி விட்டு, மோரை ஊற்றிப் பொங்கியதும் இறக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.