கோவக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மல்லி பொடி - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோவக்காயை வட்டமாகவும், சிறிது கனமாகவும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி, காயை போட்டு நன்கு வதக்கவும்.
காய் ஓரளவு வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி புளியை கரைத்து விட்டு கொதிக்கவிடவும். கொதித்து குழம்பு மசாலா வாசனை போய் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.