கொண்டைக்கடலை குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டக்கடலை - 100 கிராம் ஊற வைத்தது
புளி - பெரிய எலுமிச்சை பழம் அளவு
மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
மஞ்சள் தூள் - சிறிது
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளிபழம் அனைத்தையும் சின்ன சின்னதுண்டங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் வாணலியை வைத்து அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடேறிய பிறகு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கிள்ளி வைத்த மிளகாயைப் போட்டு தாளிக்கவும்.
கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு நறுக்கிய காய்களைப் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்க வேண்டும்.
அதன் பிறகு 3 தேக்கரண்டி குழம்பு மிளகாய்தூளை போட்டு மீண்டும் 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு புளி கரைசலை சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவும் சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.
வேக வைத்த கருப்பு கொண்டக்கடலை சேர்க்கவும். இந்த குழம்பு நன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
15 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் சிறந்த குழம்பு இது.