கும்பகோணம் கொத்ஸு
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1 கப்
புளி - சின்ன லெமன் அளவு
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சின்ன தேக்கரண்டி
சின்னதாக நறுக்கிய கத்திரிக்காய்- 4
சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 2
நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 5
பொடி பொடியாக நறுக்கிய தக்காளி - 2
கறிவெப்பிலை - ஒரு கொத்து
நறுக்கிய கொத்தமல்லி - 1 சின்ன கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பயத்தம் பருப்பை நிறைய தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
நறுக்கிய கத்தரிக்காயை.மஞ்சள் பொடி சேர்க்கவும்.
இன்னொரு அடுப்பில் கடாயை வைது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளித்துபெருங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியையும் பொட்டு வதக்கவும்.
வதக்கிய கலவையை வெந்து கொன்டிருக்கும் பருப்பில் போட்டு உப்பையும் சேர்க்கவும்.
பருப்பு நன்றாக வெந்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு சரியான காம்பினஷன்