கீரைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சுவண்ண சீனிக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி
அரிசி தண்ணீர் – குழம்புக்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
கறிவடகம் - 1
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் சீனிக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை உரித்து வைக்கவும். முருங்கைக்கீரையை கழுவி உருவி வைக்கவும். புளியை கரைத்து வடிக்கட்டி வைக்கவும்.
அரிசி கழுவிய இரண்டாம் நீரை குழம்புக்கு தேவையான அளவு எடுத்து வைக்கவும்.
தேங்காய் பால் பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் கறிவடகம், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை ஒன்றன்பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் வறுத்த வேர்க்கடலை மற்றும் சாம்பார் பொடியை போட்டு வதக்கவும்.
தூள் வதங்கியதும் சீனிக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பின் அரிசி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது முருங்கைக்கீரையை போடவும்.
நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து குழம்பை எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
ஓரளவு கெட்டிபதம் வந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கலந்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.