காலிஃபிளவர் குழம்பு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

தேங்காய் - 1/2 மூடி

பூண்டு - 4

சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள், கறிமசாலா - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள், சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி சிறிது வெங்காயம் மற்றும் துருவிய தேங்காய், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கி, பின்னர் அவற்றை அரைத்துக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறிய பூவாக கட் பண்ணி நன்றாக அலசி கொள்ளவும்.

சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மூன்றையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கின பின்பு, தக்காளி சேர்த்து கிரேவி போல் வரும் வரை வதக்கவும்.

பின் காலிஃப்ளவரை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், கறிமசாலாத் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

இதனுடன் அரைத்த விழுது மற்றும் 1 கப் தண்ணீர் இரண்டையும் ஊற்றவும்.

அடுப்பை குறைத்து மூடி இட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு ஏற்றது. சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.