கார குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - 1 கோலியளவு (கரைத்துக் கொள்ளவும்)
பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பொடிதாக நறுக்கிய தக்காளி - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
சீரகம், மிளகு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணைய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணைய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், சீரகம், மிளகை நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயப்பொடி, பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் தக்காளி போடவும்.
நன்கு வதக்கி பேஸ்ட் போல ஆனதும் சாம்பார் பொடி, உப்பு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ,நல்லெண்ணையில் பாதி ஊற்றவும்.
பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைத்து பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.