கறிவேப்பிலை குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த வெங்காயம் - 1

பொடியாக அரிந்த தக்காளி - 1

வடகம் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

நல்லெண்னெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

ஒரு மேசைக்கரண்டி எண்னெயில் வதக்க அரைக்க வேண்டியவை:

சின்ன வெங்காயம் - 6

சிறிய பூண்டு - 4 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிலகு - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

வடகம் போட்டு அவை பொரிந்ததும் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அவை குழைந்ததும் தூள்களைச் சேர்த்து சிறு தீயில் சிறிது வதக்கவும்.

அரைத்த மசாலா சேர்த்து 1 கப் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: