கறிவேப்பிலை குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 1/2 கப்

சின்ன வெங்காயம் - 20

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 4

பூண்டு - 2 பல்

இஞ்சி – சிறுத்துண்டு

கட்டிப்பெருங்காயம் - சிறுத்துண்டு

வெங்காய கறி வடகம் – ஒரு துண்டு

கடுகு - தாளிக்க

புளி - எலுமிச்சையளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும்.

அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம், வெங்காய கறி வடகம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும்.

வதக்கிய பின்னர் ஊற வைத்த புளி தண்ணீர் மற்றும் மிக்ஸியில் அரைப்பு கழுவிய தண்ணீர்(2 கப்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குழம்பு சாதம், இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.