கறிவடகக்குழம்பு
0
தேவையான பொருட்கள்:
கறிவடகம் - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
மிளகாய்ப்பொடி - 1 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (அல்லது) 2 மேசைக்கரண்டி சாம்பார்ப்பொடி
தக்காளி - 2
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவடகம் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கி பொடிகளை சேர்த்து வதக்கவும்.
புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிட வேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.