கருப்பு மொச்சை கொட்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருப்பு மொச்சை கொட்டை - 1 கப்

புளி - லெமன் சைஸ்

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

புண்டு - 2 பல்

வெங்காயம் - 1

பட்டை - ஒரு சின்ன துண்டு

லவங்கம் - 2

சோம்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சைகொட்டையை குக்கரில் வேக வைக்கவும்.

தேங்காயுடன் பட்டை, லவங்கம், சோம்பு, பூண்டு மற்றும் பாதி வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு கரைத்துவைத்துள்ள புளியை ஊற்றி சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

குழம்பு கொதித்ததும் வேகவைத்த மொச்சையை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.