கருணைக்கிழங்கு குழம்பு (4)
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கருணைக்கிழங்கினை வேக வைத்து எடுத்து, தோலை உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், உரித்த வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் அவித்த கருணைக்கிழங்குகளைப் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.