கத்திரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கத்திரிக்காய் - 2

நறுக்கிய முருங்கைகாய் - 2

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

புளி கரைசல் - 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1/2 (அல்லது) சின்ன வெங்காயம் - 15

நறுக்கிய தக்காளி - 1

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.

தூள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், முருங்கைகாய் சேர்த்து வேக விடவும்.

முருங்கை வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: