கத்திரிக்காய் மிளகு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திர்க்காய் - 3

வெங்காயம் - 1

தக்காளி - 1

தயிர் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும்.

மிளகு பொடி ஆக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், கத்திரிக்காய் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைந்து வந்ததும், தயிர் விட்டு கலந்து, மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தேவைக்கு தண்ணீர் விட்டு மூடி போட்டு காய் வேக விடவும்.

பின் திரந்து நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: