கத்திரிக்காய் புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
கறிவெப்பிலை - தாளிப்பதற்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 5 பத்தை
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
நல்லெண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை வெது வெதுப்பான நீரில் ஊர வைக்கவும்.
தேங்காய் பத்தைகளை மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
எண்ணை சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு கறிவெப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது பெருங்காய்த்தூள் சேர்க்கவும்.
கத்திரிக்காயின் காம்பினை நீக்கி விட்டு , பின்புறத்தை நான்காக கிறவும் (முளுவதுமாக காயை நறுக்காமல், 3/4 ஆக காயை கிறவும்),
கடுகு, உளுந்து தாளித்ததும் , சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும், பிறகு பூண்டை வதக்கவும், கத்திரிக்கயை வதக்கவும், காயை வதக்கும் போது தீயை சிறிதாக வைத்து , சிறிது நீர் விட்டு வதக்கவும்.
காய் பாதி வெந்த நிலையில் ,புளியை கரைத்து , அதில் உப்பு, சம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும், குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது , மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும், 10 நிமிடம் கொதிக வைத்து இறக்கி பரிமாறவும்.