கத்தரிக்காய் ரசவாங்கி
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சையளவு
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணை - 3 மேசைக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க:
வர மிளகாய் - 5
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பொடிக்க வைத்துள்ள பொருள்களை வாசனை வர வறுத்து கொர கொரப்பாக பொடிக்கவும். (தேங்காயிலுள்ள ஈரம் போக வறுக்க வேண்டும்.)
கத்தரிக்காய்களை தனித் தனி துண்டாகி விடாமல் நான்காக பிளக்கவும். (காம்பு பகுதியை விட்டு அடிப் பகுதியில் நறுக்க வேண்டும்)
கத்தரிக் காய்களை லேசாக பிளந்து பொடித்த பொடியை வைத்து அடைத்து அரை மணி நேரம் ஊற விடவும்.
வெங்காயம், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மூன்று டம்ளர் தண்ணிரில் புளியை கரைத்து வடிகட்டி, அதில் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, தக்காளி எல்லாம் போட்டு பிசைந்து வைக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி வெந்தயத்தை போட்டு வெடிக்க விடவும்.
வெங்காயம் போட்டு வாசனை வர வதக்கவும்.
கத்தரிக்காய்களைப் போட்டு மெதுவக பிரட்டவும். ஐந்து நிமிடம் கழித்து கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு இறக்கி மீதமுள்ள எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி மூடி வைக்கவும்.