கத்தரிக்காய் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 15 பல்
தக்காளி - 2
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கறிவேப்பிலை
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி - 10
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும். வெங்காய, பூண்டு நறுக்கி வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
முந்திரியை ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
புளியை 1/2 கப் நீர் விட்டு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் முந்திரி கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுத்து பரிமாறவும்.