கத்தரிக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 15 பற்கள்

தக்காளி - 2

புளி - சிறு எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

தேங்காய்த் துருவல் - 1/4 கப்

கறிவேப்பிலை - சிறிது

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை விழுதாக அரைத்து வைக்கவும்.

தக்காளியை அரைத்து வைக்கவும்.

அரை கப் தன்ணீரில் புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

அரை பதமாக வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு தூள் வாசம் போகக் கொதிக்க விடவும். அதில் புளிக் கரைசலை ஊற்றி கொதித்ததும் தேங்காய் விழுதினை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: