கத்தரிக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கிய கத்திரிக்காய் - 4
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/2 (அல்லது) சின்ன வெங்காயம் - 15
நறுக்கிய தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
புளி கரைசல் - 1/2 கப்
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.
தூள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளரி, எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.