கத்தரிக்காய் காராமணி காரக்குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 250 கிராம்
காய்ந்த காராமணி பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காராமணி பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
கத்தரிக்காய் பாதி வெந்தவுடன் காராமணியை போட்டு, புளிக்கரைசலை ஊற்றவும்.
காய் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.