கத்தரிகாய் காரகுழம்பு
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாதூள் - 1/2 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.