கட்லெட் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கட்லெட் செய்ய தேவையானவை:

கடலை மாவு - 1 கப்

மிளகாய் - 4

வெங்காயம் - பெரியது ஒன்று

பூண்டு - 5 பல்

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்ய தேவையானவை:

வெங்காயம் - பெரியது 2

புளி - சிறிய உருண்டை

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 3

மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

முந்திரி - 5

செய்முறை:

கட்லெட்டுக்கு:

வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய், மல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

கடலை மாவை கெட்டியாக கரைத்து வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், சிறிதளவு உப்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய், மல்லிதழையை சேர்த்து வதக்கவும்.

பிறகு கடலை மாவு கரைசலை சேர்த்து சுருண்டு வரும் வரை கிளறி இறக்கி ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.

ஆறியவுடன் சிறு துண்டுகளாக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குழம்புக்கு:

வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சோம்பு தாளிக்கவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, 2 கப் தண்ணீரில் கரைத்த புளி கரைசல், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் முந்திரியை சேர்த்து அரைத்து குழம்பில் ஊற்றவும்.

5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பரிமாறும் போது பொரித்த கட்லெட்களை குழம்பில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: