கடுகு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடுகு - 3 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 8

புளி - சிறிய எலுமிச்சை அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பில்லை, நல்லெண்ணை அல்லது கடுகெண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடுகு வெந்தயம் தனியா மற்றும் மிளகாயை எண்ணையில்லாமல் வறுக்கவும். வாசனை வரும் வரையில் வறுத்தால் போதுமானது. ஆறியதும் பொடியாக்கி வைக்கவும்.

புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். அதில் அரைத்த போடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

எண்ணெய் சூடாக்கி தாளிக்க வேண்டியதை தாளிக்கவும்.

பின்பு புளி கரைசலை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடு சாதத்துடன் அல்லது உளுந்து சாதம், கலந்த சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.