கடலைக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்

சீரகம் - அரை தேக்கரண்டி

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

பெரிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு கைப்பிடி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

குருமிளகுத் தூள் - 3/4 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீர் வடித்து வைக்கவும்.

பின் எண்ணெயை காயவைத்து அதில் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் மீதம் கொடுத்துள்ள பொடிகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து கடலையை போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் 1.5 கப் சேர்த்து குக்கரில் இட்டு 7 விசில் விடவும்.

பிறகு ஆவி அடங்கியதும் இறக்கி பார்த்தால் திக்கான கடலைக்குழம்பு இருக்கும். இது திக்காக சாப்பிட்டால் தான் சுவை.

கொஞ்சம் நீர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் அதிலிருந்து 1/4 கப் கடலையை எடுத்து மிக்ஸியில் அடித்து அதிலேயே ஊற்றி தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

குறிப்புகள்: