எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் - 6
சின்ன வெங்காயம் - 10 அல்லது 15
3. தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - சிறிது
செய்முறை:
வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவற்றை எண்ணெயில் முதலில் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, பின் கறிவேப்பிலை, பின் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், கத்திரிக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியாக பொடித்து வைத்த பருப்பு தூளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்து பரிமாறவும்.