உருண்டை மோர்க்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மோர்குழம்புக்கு:

கெட்டியான மோர் - 2 கப்

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை கொத்தமல்லி - சிறிதளவு

மோர்குழம்புக்கு அரைக்க:

தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4 அல்லது 5

சீரகம் - ஒரு தேக்கரண்டி

உரித்த சின்ன வெங்காயம் - 6

உரித்த வெள்ளை பூண்டு - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கடலை மாவு - 2 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

பருப்பு உருண்டைக்கு:

கடலைபருப்பு - 1/2 டம்ளர்

வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 4 அல்லது 5

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெள்ளை பூண்டு - 1

தேங்காய் பூ - 1 தேக்கரண்டி

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1 (சிறிய துண்டு)

கறிவெப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

மிக்ஸியில் முதலில் சிவப்பு மிளகாய், உப்பு, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தூள் போட்டு அரைக்கவும். பிறகு இதிலேயே கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.

கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

பச்சை கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

நறுக்கின பெரிய வெங்காயத்தையும், தேங்காய்ப்பூவையும் இத்துடன் கலந்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மோர்குழம்பிற்கு அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மோரில் இந்த கலவையை நன்கு கலக்கவும். பிறகு அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறவும். மூன்று முறை பொங்கி வரும்வரை கிளறவும்.

பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து போட்டு கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கிளறவும்.

குழம்பை இறக்கி வைத்து அதில் வெந்த பருப்பு உருண்டைகளை போடவும். பருப்பு உருண்டை மோர்குழம்பு தயார்.

குறிப்புகள்: