உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பில்லை - 4 இலை
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உருண்டை தயாரிக்க:
கடலைப் பருப்பு - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
கடலைப் பருப்பினை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும்.
கடலைப் பருப்பு, சோம்பினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதனை இட்லி தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து அதில் அடுக்கி ஆவியில் 8 - 10 நிமிடம் வேகவிடவும்.
புளியினை 3 கப் தண்ணீருடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து திரும்பவும் நன்றாக கரைக்கவும்.
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்..
அதன் பின் வெங்காயம் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் ஊற்றி தட்டு போட்டு மூடி 15 - 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
கடைசியில் வேகவைத்துள்ள உருண்டைகளை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.
சுவையான உருண்டை குழம்பு ரெடி.