ஈசி கார குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 5 பல்

புளி - தேவையான அளவு

குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். பிறகு அதில் பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கு பாதி வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அதில் மிளகாய் தூள், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து கலவை குழம்பு பதத்திற்கு வந்த உடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி மற்றும் சாதம் போன்றவற்றிற்கு ஏற்ற குழம்பு இது இரண்டு நாள் வரை நன்றாக இருக்கும்.