இஞ்சி குழம்பு (3)
0
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 1 முழுசு
சின்ன வெங்காயம் - 10
சாம்பார் தூள் - 2 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வர வதக்கவும்.
இஞ்சியுடன், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்து தூள் வாசம் போனதும் புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.