அரைத்து விட்ட புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 6
முழு பூண்டு - 1
கத்திரிக்காய் (அல்லது) முருங்கக்காய் - தேவைக்கேற்ப்ப
புளி - எலுமிச்சை அளவு
நல்லஎண்ணை - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்கவும்:
காய்ந்த மிளகாய் - 4 பெரியது
மல்லி விதை - 1 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 சிட்டிகை
அரிசி - 1/2 தேக்கரன்டி
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
புளியை 11/2 கப் நீரில் கரைக்கவும்
அரைக்க கொடுத்துள்ளவற்றை வாணலியில் சிறிது எண்ணை விட்டு வறுத்து அரைக்கவும்
அரைத்த விழுதை புளி தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்
வாணலியில் எண்ணை ஊற்றி வெந்தயம் கடுகு, உளுந்து தாளிக்கவும்
பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்க்கவும் வதங்கியதும் காயை சேர்க்கவும்,
பின்னர் புளி கரைசலுடன் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
கெட்டியாக புளி குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்