அரைக்கீரை குழம்பு
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த அரைக்கீரை - 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்
வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
புளி - கோலி அளவு (நீரில் கரைத்தது)
தாளிக்க:
கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 3
கறிவேப்பிலை - 1 இனுக்கு
செய்முறை:
கீரையை அலசி அதனுடன் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து 1/2 கப் தண்ணீருடன் வேகவைக்கவும்.
5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் இறக்கி தண்ணீரை கொஞ்சம் இறுத்து வைத்து கீரையை நன்றாக கடையவும்(மசிக்கவும்).
பின் வேறு வாணலியில் எண்ணைய், கடுகு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு மசித்த கீரையை ஊற்றி ஒரு கொதி கொதித்ததும் வேகவைத்த பருப்பை போட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி பரிமாறவும்.