அகத்திக்கீரை கழுநீர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு

அரிசி கழுவிய நீர் - 3 டம்ளர்

சின்ன வெங்காயம் - 20

தேங்காய் துருவல் - 1/2 மூடி

காய்ந்த மிளகாய் - 4

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அகத்திக்கீரையை உருவி, பழுப்பு இல்லாமல் எடுத்து வைக்கவும்.

தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும்.

அரிசி கழுவிய நீரை அடுப்பில் வைத்து, சூடேறியதும் கழுவிய அகத்திக்கீரையையும், முழு வெங்காயம், தட்டிய சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.

அகத்திக்கீரை வெந்தவுடன், உப்பு, தேங்காய் பால் சேர்த்து கொதி வருவதற்கு முன்பே இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: