வேங்கரிசி மாவு (சத்து மாவு)
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 ஆழாக்கு
செய்முறை:
கொதிக்கும் தண்ணீரில் அரிசியை கழுவிப்போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டியில் வடித்து விடவும். அரிசியை ஆறவிட்டு காயப்போடவும்.
கடாயை சூடாக்கி கைப்பிடியளவு அரிசியை போட்டு பொரிந்ததும் தட்டில் கொட்டி ஆறவிடவும். இதேபோல் எல்லாவற்றையும் பொரிக்கவும்.
மிஷினில் கொடுத்து அரைக்கவும். மிக்ஸியிலும் சிறிது சிறிதாக போட்டு அரைக்கலாம்.
இதில் தேவையானதை எடுத்து சீனி போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
நெய் போட்டு பிசறி சாப்பிடலாம். மிக்ஸியில் சீனியை தூளாக்கி மாவில் சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.