வாழைப்பூ, கீரை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய வாழைப்பூ - 1

ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு

துவரம் பருப்பு - 50 கிராம்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 4

கடுகு & உளுந்து - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணை - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.

வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றி துருவல் போல் ஆனதும் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சீரகம் போடவும்.

வெடித்ததும் வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.

வதங்கியதும் வாழைப்பூ, உப்பு போடவும்.

ஐந்து நிமிடம் நன்றாக கிளறி கீரை சேர்க்கவும்.

மேலும் ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த பருப்பை போட்டு முன்று நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: