பாசிப்பயறு பிரட்டல்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
பட்டை, இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
செய்முறை:
பாசிப்பயறை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி நீரை வடித்து விட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைத்தல் மறுநாள் முளை விட்டு இருக்கும்.
பாசிப்பயரில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு உப்பு போட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
பயறில் உள்ள தண்ணீரை வடித்து அந்த தண்ணீரை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றை அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
மூன்று நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பயறை சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலா போட்டு கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.