பரங்கிக்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் துண்டுகள் - தேவையான அளவு
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 1/2 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி சூடு பண்ணவும். கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் தாளிக்கவும்.
துவரம்பருப்பையும் போட்டு பொன் நிறமாக வறுக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். மிளகாய்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும்.
அதில் புளியை கரைத்து ஊற்றவும். தேங்காயை அரைத்து ஊற்றி உப்பு நறுக்கிய பரங்கிக்காய் சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளிந்ததும் இறக்கி பரிமாறவும்.