நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி கறி - 500 கிராம்

மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி

எண்ணெய் - 100 மில்லி

இஞ்சி சாறு - 100 கிராம்

மஞ்சள் தூள் - 3 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி, சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய் தூள் போட்டு கலக்கிக் கொள்ளவும்.

அதனுடன் கோழி கறியையும் போட்டு நன்றாக பிசைந்து பிறகு கறி மசால் பொடியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை கொட்டி வதக்கவும்.

கறி பொன்னிறமாக வந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: