தக்காளி பருப்பு பச்சடி
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
துவரம் பருப்பு – 100 கிராம்
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
சோம்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
மல்லி இலை – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 பல்
செய்முறை:
பருப்பை இருநூறு மில்லி தண்ணீரில் மலர வேக வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.
தக்காளிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கி மீதமுள்ள எண்ணெயில் கிள்ளிய வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, மல்லி இலை தூவி மூடவும்.