செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 15
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 8 பல்
தேங்காய் - 2 சில்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
முந்திரிப் பருப்பு - 8
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
சிவப்பு பவுடர் - 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு, இஞ்சி, தேங்காய் சில் தனியாகவும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தனியாகவும் அரைக்கவும்.
கோழியை சுத்தம் செய்து சிறு துண்டங்களாக வெட்டி உப்பு, மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, அரை கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த தூள்(பட்டை, கிராம்பு, ஏலக்காய்) போட்டு சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கவும்.
ஊற வைத்த கோழியை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இளம் தனலில் போடவும்.
கறி வெந்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து சாறு புரட்டினாற் போல் வந்தவுடன் எலுமிச்சம்பழச் சாறு (2 சொட்டு) தக்காளி சாஸ், கொத்தமல்லித் தழை போட்டு இறக்கி பரிமாறவும்.