செட்டிநாடு காய்கறி வறுவல்
தேவையான பொருட்கள்:
காரட் - 100 கிராம்
உருளை - 150 கிராம்
காலிஃப்ளவர் - 1
பச்சை மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
அரைப்பதற்கு:
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை - 2s
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். காய்கறிகளை வேகவைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வாசம் போகும் வரை வதக்கி வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
மசாலா காய்கறியில் நன்கு பரவியதும் இறக்கி பரிமாறவும்.