காரக் குழிப்பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 100 கிராம்
கடுகு - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 5
மிளகாய்வற்றல் - 5
பெருங்காயம் - பட்டாணி அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் முதல் நாளே ஊறவைத்து அரைத்து மறுநாள் உபயோகிப்பது போல புளிக்க வைத்து விடவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பணியாரக் கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள புளித்த மாவை ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.